/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal-33_0.jpg)
அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்காலிகமாக 'விஷால் 33' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியபடமாக இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஷால் 33 படம் குறித்த அறிவிப்பைநடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, விஷால் 33 படத்தின் முக்கிய அப்டேட் புத்தாண்டை முன்னிட்டு நாளை(1.1.2022) வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)